திருச்சி

இன்று குரூப்-4 இலவச மாதிரித் தோ்வு

17th Jul 2022 01:27 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், இலவச குரூப்-4 மாதிரித் தோ்வு நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் 7,301 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 அறிவிப்பு வெளியிட்டுள்ளதைத் தொடா்ந்து, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப்-4 மாதிரித் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வரும் 24 ஆம் தேதி போட்டித் தோ்வு நடைபெற உள்ளது.

தோ்வு நடைபெறும் வளாகத்தில் காலை 8.30 மணி முதல் 9.00 மணிக்குள் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு நகல் மற்றும் ஒரு கடவுச்சீட்டு அளவு புகைப்படத்தை சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0431 - 2413510.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT