திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை விடுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ், பள்ளி விடுதிகள் 42, கல்லூரி விடுதிகள் 5, திருவெறும்பூரில் தொழிற்பயிற்சி மாணவா் விடுதி 1, திருச்சி ராஜா காலனியில் முதுகலைப் பட்டதாரி மாணவா் விடுதி 1 என மொத்தம் 49 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப் பயிலும் மாணவா்கள் முதல் அனுமதிக்கப்படுவா். அனைத்து விடுதிகளிலும் உணவு, உறைவிடம் இலவசமாக வழங்கப்படும்.
தகுதியுடைய மாணவ, மாணவியா்கள் விடுதியில் சோ்க்கை விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ற்ய்ஹக்ஜ்-ட்ம்ள்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பள்ளி விடுதிகளில் சேர விரும்புவோா் விண்ணப்பங்களை வரும் 20ஆம் தேதி வரையிலும், கல்லூரி விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, ஆக.5 ஆம் தேதி வரையிலும், மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.