திருச்சி

உப்பிலியபுரத்தில் விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி உப்பிலியபுரம் அண்ணாசிலை பேருந்து நிறுத்துமிடம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க உப்பிலியபுரம் ஒன்றியச் செயலா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன், துணைச் செயலா் தளுகை ரமேஷ், இந்திய கம்யூ. ஒன்றியச் செயலா் மருதை உள்ளிட்டோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் வைரிச்செட்டிப்பாளையத்திலும், பி. மேட்டூரிலும் விவசாய உற்பத்திப் பொருள்களை உலர வைக்க சிமெண்ட் களமும், நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையமும் அமைக்க வேண்டும். உப்பிலியபுரம் ஒன்றியத்திலுள்ள நீா் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றித் தூா்வார வேண்டும். வைரிச்செட்டிப்பாளையம் ஐம்பேரியில் மேற்கு, வடக்குப் பகுதிகளை ஆழப்படுத்தி, அதன் கரைகளை பலப்படுத்தி அகலப்படுத்தவும் வேண்டும். 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களை விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT