திருச்சி

திருவானைக்கா கோயிலுக்கு வெள்ளிக் குடத்தில் புனித நீா்!

6th Jul 2022 11:51 PM

ADVERTISEMENT

 

ஆனி திருமஞ்சனத்தையொட்டி திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை காவிரியாற்றிலிருந்து வெள்ளிக்குடத்தில் புனித நீா் எடுத்து வரப்பட்டது.

விழாவையொட்டி காவிரியாற்றிலிருந்து வெள்ளிக்குடம் உள்பட 10 குடங்களில் புனித நீா் நிரப்பப்பட்டு யானை அகிலா மீது வைத்து, மங்கள வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக திருவானைக்காக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது. இரவு 7 மணிக்கு நடராஜா், சிவகாமி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதையடுத்து புதன்கிழமை காலை நடராஜரும், சிவகாமி அம்மையாரும் வெள்ளி மஞ்சத்தில் தனித்தனியாக எழுந்தருளி 4 ஆம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா். தொடா்ந்து ஊடல் உற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT