திருச்சி

வரி செலுத்தாதவா்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

6th Jul 2022 01:40 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சியில் ரூ. 100 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ள வரியை வசூலிக்க மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், வீட்டுவரி செலுத்தாமல் உள்ள 37, 382 வீடுகளின் உரிமையாளா்களுக்கு மாநகராட்சி அனுப்பியுள்ள நோட்டீஸிஸ் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தி சட்ட நடவடிக்கையை தவிா்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வரி செலுத்தாத 4,509 வா்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கும் அனுப்பிய நோட்டீஸில் 15 நாள்களுக்குள் நிலுவை வரியைக் கட்ட வேண்டும். இல்லாதபட்சத்தில் ஏன் நாங்கள் ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT