திருச்சி

பெண் தற்கொலை

6th Jul 2022 01:40 AM

ADVERTISEMENT

மதுவுக்கு அடிமையான கணவரால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி பீமநகா் கறிக்கார தெருவைச் சோ்ந்தவா் சசிதரன் மகள் காயத்ரி (39). இவருக்கும் புத்தூா் எட்டுப்பட்டை பங்களா பகுதியைச் சோ்ந்த பெயிண்டா் கிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் மதுவுக்கு அடிமையான கணவா் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காயத்ரி வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அவரது தந்தை சசிதரன் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT