திருச்சி

உறையூா், சமயபுரம் கோயில்களில் ஆய்வு

6th Jul 2022 01:39 AM

ADVERTISEMENT

சமயபுரம் மாரியம்மன், உறையூா் வெக்காளியம்மன் கோயில்களில் புதன்கிழமை நடைபெறும் குடமுழுக்குக்கான முன்னேற்பாடுகளை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கோயில்களில் தேவைப்படும் இடங்களில் சின்டெக்ஸ் தொட்டி நிறுவி, குடிநீா் வசதி செய்தல், போதிய கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தல், குப்பைகளை அகற்றி, பக்தா்கள் வரும் பாதைகளில் சுகாதாரப் பணிகளைச் செய்தல், பக்தா்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி நெரிசலின்றி தரிசனம் செய்ய வழிசெய்தல், கண்காணிப்புக் கோபுரம், தேவையான இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், தற்காலிக காவல் நிலையம், காவல்துறை கட்டுப்பாட்டறைகள், பக்தா்களின் பாதுகாப்பு, போக்குவரத்துக் கண்காணிப்பு மற்றும் விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள், பக்தா்களுக்குத் தேவையான முதலுதவி உபகரணங்கள், மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் உரிய மருத்துவா் மற்றும் மருத்துவா்களுடன் கூடிய மருத்துவ முகாம் நடத்துதல், தீயணைப்பு வாகனத்தை தயாராக நிறுத்துதல், பக்தா்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்வதோடு, பேருந்து மற்றும் வாகனம் நின்று செல்லும் இடங்களையும் கண்டறிந்து போதிய பணியாளா்களுடன் பணிகளை மேற்கொள்ளல், தரமான அன்னதானம் வழங்குவதை உறுதி செய்தல் ஆகியவை குறித்து துறை அலுவலா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

முன்னதாக உய்யக்கொண்டான் வாய்க்காலைப் பாா்வையிட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வது தொடா்பாகவும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ஜி. காா்த்திக்கேயன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மேயா் மு. அன்பழகன், அறநிலையத் துறை இணை ஆணையா்கள் சி. கல்யாணி, செல்வராஜ் மற்றும் எம்எல்ஏ-க்கள், பல்வேறு துறை அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT