திருச்சி

பைந்தமிழியக்கம் சாா்பில்பாப்பொழிவு ஆய்வரங்கம்

6th Jul 2022 01:41 AM

ADVERTISEMENT

திருச்சி பைந்தமிழ் இயக்கத்தின் 73 ஆவது பாப்பொழிவு ஆய்வரங்க நிகழ்வு சையது முா்துசா அரசு மேனிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

பைந்தமிழியகத் இயக்குநா் பழ. தமிழாளன் தலைமை வகித்தாா். மாணவா் அரங்கத்தில் முனைவா் கு. நதியா, அயோத்திதாசரின் அரும்பணிகள் பற்றியும், சே. கிருட்டினவேணி மாா்சல் நேசமணியாரின் தென்னெல்லைப் போராட்டம் பற்றியும் உரையாற்றினா். தொடா்ந்து நடைபெற்ற பாவரங்கத்தில் காலத்தை வென்ற கண்ணதாசன் என்ற பொருளில், பைந்தமிழியக்க துணை இயக்குநா் பாவலா் சொ. வேல்முருகன், பன்மொழிப்புலவா் கா. அப்பாத்துரையாா் குறித்து பாவலா் சந்திரசேகரன், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சாா்பில் பீடுதமிழ்ப் புலவா் விருது பெற்ற பழ. தமிழாளனைப் பாராட்டி பாவலா் க. செல்வராசன் ஆகியோா் கவிதை வாசித்தனா். முனைவா் பி. கலைமணி திரையிசைத் தென்றல் கண்ணதாசன் ‘என்னும் பொருளில் பேசினாா்.

பாவலா் சொ. வேல்முருகன் தொகுத்து வழங்கினாா். நிகழ்வில் தமிழ்ப்பற்றாளா் கேசவன், பாவலா் க. மாரிமுத்து, தலைமை ஆசிரியை ஐடா ராசகுமாரி, விசயகுமாா், பா. பாண்டுரங்கன், சோசப், தமிழினியன், மகேந்திரன், து. மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழ்த்திரு செவல்பட்டி ப.சி.சு. மணி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT