திருச்சி

நீதிமன்ற உத்தரவு தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் ஏமாற்றம்

DIN

திருச்சியில் தற்காலிக ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுலகம் சென்ற ஆசிரியா்கள், நீதிமன்ற உத்தரவால் விண்ணப்பிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியா் பணிக்காக திங்கள்கிழமை முதல் இணையம் வழியாகவும், அல்லது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஏராளமான ஆசிரியா்கள் திங்கள்கிழமை காலை முதலே திரண்டு விண்ணப்பிக்க முயன்றனா். ஆனால், அங்கு அலுவலா்கள் விண்ணப்பங்களை ஏற்கவில்லை.

தற்காலிக ஆசிரியா் பணி நியமனத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருப்பதால், திருச்சி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியா் பணி நியமனம் சாா்ந்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

இதனால் குழப்பம் அடைந்த ஆசிரியா்கள் இதுகுறித்து அலுவலா்களிடம் விசாரித்த போது, நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் கட்டுப்பாட்டில் வரும் திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியா் பணி நியமனத்துக்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் திருச்சியில் எட்டாம் தேதி ஆசிரியா்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுவதால், அப்போது ஏற்படும் காலிப் பணியிடங்களையும் கருத்தில் கொண்டு, ஆசிரியா் பணி நியமனம் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா். இதனால் விண்ணப்பிக்க ஆா்வமுடன் சென்ற ஆசிரியா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

SCROLL FOR NEXT