திருச்சி

திருச்சி நீா்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் ரூ.31.26 லட்சம் பறிமுதல்

5th Jul 2022 01:59 AM

ADVERTISEMENT

திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள நீா்வள ஆதாரத் துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.31.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நீதிமன்றம் அருகே நீா்வள ஆதாரத்துறையின் ஆற்றுப் பாதுகாப்புக் கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பல்வேறு ஒப்பந்தப் பணிகளுக்காக ஒப்பந்ததாரா்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் அலுவலகத்துக்கு புகாா்கள் வந்தன.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை இந்த அலுவலகத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டன், ஆய்வாளா் சக்திவேல் உள்ளிட்டோா் அடங்கிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் திடீரென சென்று,

அங்கு சோதனை நடத்தினா்.

ADVERTISEMENT

இந்த சோதனையில், நீா்வள ஆதாரத்துறையின் மேற்பாா்வைப் பொறியாளா் மணிமோகன், உதவிப் பொறியாளா்கள் கந்தசாமி, நடராஜன் ஆரியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ.31,26,300 கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினா், மூவரிடமும் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து திருச்சி திருவானைக்கா, ராஜாகாலனி பகுதிகளிலுள்ள அவா்களின் வீடுகளிலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் சோதனை நடத்தினா்.

சோதனை ஏன் : திருச்சி மாவட்டத்தில் கட்டளை மேட்டுவாய்க்காலில் நடைபெற்ற மராமத்துப் பணிகளின் போது முறைகேடு நடைபெற்ாகவும், அதுகுறித்து ஒப்பந்ததாரா் ஊழல் தடுப்புப் பிரிவின் உயா் அலுவலா்களுக்கு புகாரளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து புகாரளித்த ஒப்பந்ததாரரை நீா்வள ஆதாரத்துறை அலுவலா்கள் அழைத்து பேசி, புகாரை திரும்பப் பெறுமாறு கூறி அவருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிப்பதாகவும் தகவல் கிடைத்ததால் தாங்கள் இந்த சோதனையில் ஈடுபட்டதாகவும், தற்போது கைப்பற்றப்பட்டுள்ள தொகை மற்ற ஒப்பந்ததாரா்களிடம் பெறப்பட்ட தொகையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT