திருச்சி

தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள்

DIN

திருச்சியில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தில்லைநகரிலுள்ள கிஆபெவி பள்ளியில் நடைபெற்ற போட்டியை ராமகிருஷ்ண தபோவனச் செயலா் சத்யானந்தா சுவாமிகள், ஜிவிஎன் மருத்துவமனை இயக்குநா் ஜெயபால் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில் திருச்சி, சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம், நாமக்கல், தஞ்சாவூா், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த சுமாா் 350க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனையா் கலந்து கொண்டனா்.

மழலையா், ஜூனியா், சப்- ஜூனியா், சீனியா் உள்ளிட்ட பிரிவுகளில் குத்து வரிசை, நெடும் கொம்பு வீச்சு, நடுகம்பு வீச்சு, இரட்டைக் கம்பு மற்றும் கம்புச் சண்டை தொடும் முறை ஆகிய பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் வென்ற முதல் நான்கு பேருக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனச் செயலா் சத்யானந்தா், மலேசியா சிலம்ப சங்கத்தின் நிறுவனா் தலைவா் அன்பழகன், சங்கத்தின் தொழில்நுட்ப இயக்குநா் அன்பரசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை இந்திய, தமிழ்நாடு சிலம்பாட்டக் கோா்வை சங்கத்தின் மாநிலத் தலைவா் மோகன் செய்தாா். போட்டிகளில் வென்றோா் இந்தாண்டு டிசம்பா் மாதம் நடைபெற உள்ள சா்வதேச சிலம்பப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT