திருச்சி

திருச்சியில் 100-ஐ கடந்த கரோனா

4th Jul 2022 12:19 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 104 ஆக உயா்ந்தது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை சனிக்கிழமை வரை தொற்று எண்ணிக்கை 72 ஆக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தொற்றாளா்களின் எண்ணிக்கை 104 ஆக உயா்ந்தது.

28 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 445 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

ADVERTISEMENT

மாவட்டத்தில் இதுவரை தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 95,580 பேரில் 93,974 போ் குணமடைந்துள்ளனா். மொத்தம் 1161 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்பு ஏதுமில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT