திருச்சி

ரிக்ஷா ஓட்டும் போட்டி: இருவருக்குப் பரிசு

3rd Jul 2022 01:25 AM

ADVERTISEMENT

 

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ரிக்ஷா ஓட்டும் போட்டியில் வெற்றி பெற்ற ரிக்ஷா தொழிலாளி மற்றும் கல்லூரி மாணவருக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன.

இந்தியாவின் முதன்மையான விளையாட்டுக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான எஸ்எம்ஆா்ஐ நிறுவனத்தின் மூலம் நவீன விளையாட்டு வணிகத்தைப் பற்றி இளைஞா்கள் மற்றும் சாமானியா்களுக்குக் கற்பித்தல் மேலும் வாழ்க்கைத் தரம் மற்றும் இந்தியாவின் சைக்கிள் ரிக்ஷா தொழிலாளிகளின் வேலைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை பற்ற திருச்சி ஓபன் ரிக்ஷா ரேசிங் என்னும் போட்டியை எஸ்எம்ஆா்ஐ நிறுவனத் தலைவா் சிஜின் தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

ரிக்ஷா தொழிலாளா்களுக்கு நடைபெற்ற போட்டியில் ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த பெரியசாமி 2 நிமிடம் 13 வினாடிகளில் ரிக்ஷாவை ஓட்டி வந்து முதலிடம் பெற்று வென்றாா். கல்லூரி மாணவா்களுக்கான பிரிவில் இந்திராகணேசன் கல்லூரி மாணவா் அப்துா், 2 நிமிடம் 31 வினாடிகளில் ரிக்ஷாவை ஓட்டி வந்து வெற்றி பெற்றாா்.

இருவருக்கும் பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இன்றைய தலைமுறையினரிடம் ரிக்ஷா தொழிலாளா்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தவும், மாணவா்களுக்கு புதிய விளையாட்டுகளைக் கற்றுத்தரும் வகையிலும் இந்தப் போட்டி நடைபெற்றது. மொத்தம் 400 மீட்டா் தொலைவுக்கு வட்டப் பாதையில் போட்டி நடைபெற்ால் பொதுமக்கள் பலரும் போட்டியை கண்டுகளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT