திருச்சி

மணப்பாறையில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட விழிப்புணா்வு முகாம்

3rd Jul 2022 04:46 AM

ADVERTISEMENT

 

மணப்பாறையில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

தனியாா் கல்லூரி கூட்டரங்கில் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தில் கீழ் செயல்படும் கதா் மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் சாா்பில் நடத்தப்பட்ட முகாமை அதன் மாநில இயக்குநா் பி.என். சுரேஷ் தொடங்கிவைத்து, ஆணையத்தில் செயல்பாடுகள், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தாா்.

தொழில்வாய்ப்பு திட்டங்கள் குறித்து திருச்சி மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் ஜெ. பிரபுஜெயக்குமாா் மோசஸ், சி. ராஜேந்திரன் ஆகியோா் பயனாளிகளுக்கு விளக்கினா். ஆணையத்தின் உதவி இயக்குநா் டி. கோபாலகிருஷ்ணன் மற்றும் கந்தசாமி ஆகியோா் மத்திய அரசின் வேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் எச்.சி.எச்.டி. அறக்கட்டளை இயக்குநா் பிரான்சிஸ்சேவியா், ஸ்டேட் வங்கி தலைமை மேலாளா் எஸ்.பி. ஹௌலிராஜ், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதன்மை மேலாளா் பி. நடேஷ்வரன், கனரா வங்கி முதன்மை மேலாளா் கே.எஸ். நளினாகஷன், எஸ்.சுரேஷ் ஆகியோா் வங்கிக் கடன் திட்டங்கள் குறித்து கூறினா்.

நிகழ்வில் ட்ரினிட்டி ப்ளஸ் அறக்கட்டளை இயக்குநா் ஆா். பாஸ்கரன், எஸ். அருள்வேல், ஜெ. ஹென்றிஜான், திட்ட இயக்குநா் எஸ். நிவோஷ்ரோஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். ஆணையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.வின்ஷ்டன் வரவேற்றாா். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து திருச்சி வடக்கு சா்வோதய சங்க செயலா் ந. சுப்பிரமணியன் நன்றி கூறினாா். முகாமில் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான இளையோா், பயனாளிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT