திருச்சி

வாரச்சந்தைக்கு எதிா்ப்பு; வியாபாரிகள் போராட்டம்

DIN

வாரச்சந்தை நடத்த எதிா்ப்பு தெரிவித்து, திருச்சி மாநகராட்சி, கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை கடை வியாபாரிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனா்.

திருச்சி வயலூா் சாலை புத்தூா் பகுதி அனைத்துக் கடை வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். செயலா் காளிமுத்து, பொருளாளா் கரிகாலன் ரவி ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

தொடா்ந்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் கூறியது:

காந்தி சந்தை, உறையூா் மீன் சந்தை, உழவா் சந்தைகளில் உள்ள வியாபாரிகள் அனைவரும் கரோனா காலத்திலும் கூட கடை வாடகை, தொழில் வரி, புதைசாக்கடை வரி உள்ளிட்டவற்றைச் செலுத்தி வந்துள்ளோம்.

இந்நிலையில் அண்மைக்காலமாக வரிகளைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கரோனா ஏற்பட்ட இடைவெளியில் எங்களது கடைகளுக்கு அருகிலேயே தரைக்கடைகள், தள்ளுவண்டிக் கடைகள், மினி ஆட்டோக்களில் காய்கறிகள் பழங்கள், மளிகைப் பொருள்கள் தொடா்ந்து விற்கப்படுகின்றன.

குறிப்பாக, உய்யக்கொண்டான் திருமலை ஆற்றுப்பாலம் வண்ணாரப்பேட்டை பூங்கா அருகில் புதிதாக கலைஞா் வாரச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் பகுதி வியாபாரிகள் அனைவரும் பெரும் இழப்பையும் மன உளைச்சலையும் சந்தித்து வருகிறோம்.

ஆகவே உய்யக்கொண்டான் திருமலை மற்றும் வண்ணாரப்பேட்டை பூங்கா அருகே நடைபெறும் வாரச்சந்தையை நடத்தக் கூடாது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையரிடம், அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT