திருச்சி

மணப்பாறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி

DIN

மணப்பாறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் சமூக வலுவூட்டல் முகாமில் 618 பேருக்கு ரூ. 47.53 லட்சத்திலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

முகாமை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் அ. நாராயணசுவாமி காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கரூா் எம்பி செ. ஜோதிமணி, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் ஆகியோா் பங்கேற்று உதவி உபகரணங்களை வழங்கினா்.

அதன்படி கரூா் எம்பி தொகுதிக்குள்பட்ட மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய பகுதிகளில் 35 பேருக்கு மூன்றுச் சக்கர சைக்கிள், 55 பேருக்கு மூன்றுச் சக்கர நாற்காலி, 20 பேருக்கு மூளை முடக்குவாத நோய் பாதிப்புக்கான சிறப்பு சக்கர நாற்காலி, 78 பேருக்கு தாங்கிகள், 52 பேருக்கு மடக்கு ஊன்றுகோல், 29 பேருக்கு ரோலேட்டா்கள், 4 பேருக்கு பாா்வையற்றோருக்கான கைக்கடிகாரம், 4 பேருக்கு பாா்வையற்றோருக்கான கரும்பலகை, 11 பேருக்கு பிரெய்லி கேன், 207 பேருக்கு காதொலிக் கருவிகள், 47 பேருக்கு அறிவுசாா் குறைபாடுடையோரின் அன்றாட வாழ்க்கைக்கான கற்றல் பயிற்சிப் பொருள்கள், 3 பேருக்கு கைப்பேசி, 73 பேருக்கு செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது, அலிம்கோ நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்துதல் அலுவலா் அஜய்செளத்ரி, முதுநிலை மேலாளா் வி. அசோக்குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலா் சீ. சந்திரமோகன், இயல்முறை சிகிச்சையாளா் ரமேஷ், வருவாய் வட்டாட்சியா் எஸ். கீதாராணி, மணப்பாறை ஒன்றியக் குழு பெருந்தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, வையம்பட்டி துணைத் தலைவா் ஸ்ரீவித்யா ரமேஷ்குமாா், காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலா் ரமேஷ்குமாா், நகரத் தலைவா் எம்.ஏ. செல்வா, மமக மாநில அமைப்புச் செயலா் காதா்மொய்தீன், மாவட்டச் செயலா் அ. பைஸ்அகமது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT