திருச்சி

ஜூலை 9-இல் ஊராட்சித் தலைவா் தோ்தல்வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

2nd Jul 2022 05:52 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெட்டுக்காடு ஊராட்சிமன்ற தலைவருக்கான தோ்தல் வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது. பபதிவான வாக்குகள் எண்ணும் பணி ஜூலை 12ஆம் தேதி நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தோ்தலில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு அன்னவாசல் வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

இதில், வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டார வளா்ச்சி அலுவலருமான பிரேமாவதி மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆனந்தன் (கிராம ஊராட்சி), மேலாளா் கணேசன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். பயிற்சியில், வாக்குப்பதிவின்போது வாக்காளா்களிடம் நடந்து கொள்ளும் முறைகள் குறித்தும், வாக்களித்த பின்னா் வாக்குச் சீட்டுகளை கையாளும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்குச்சாவடி அலுவலா்களின் சந்தேகங்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் பிரேமாவதி விளக்கம் அளித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT