திருச்சி

திருச்சி வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

2nd Jul 2022 04:48 AM

ADVERTISEMENT

திருச்சிக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சா்கள், ஆட்சியா் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

கரூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சிக்கு தனி விமானத்தில் வெள்ளிக்கிழமை வந்த அவரை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், ஏடிஜிபி தாமரைக் கண்ணன், மாநகரக் காவல் துறை ஆணையா் ஜி. காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி ஆகியோா் வரவேற்றனா்.

தொடா்ந்து அமைச்சா்கள் கே.என். நேரு, எஸ். ரகுபதி, வி. செந்தில்பாலாஜி, மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏ-க்கள் சீ. கதிரவன், எம். பழனியாண்டி, அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா், ந. தியாகராஜன் மற்றும் திமுக நிா்வாகிகள், திமுக தொண்டா்களும் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பின்னா் திருச்சி மாநகருக்குள் வந்த முதல்வருக்கு சாலையின் இருபுறமும் பொதுமக்கள், கட்சியினா் வரவேற்பு அளித்தனா். ஆங்காங்கே திரண்டிருந்த மக்களிடம் வாகனத்தில் இருந்தபடியே கோரிக்கை அவா் மனுக்களைப் பெற்று கரூா் புறப்பட்டுச் சென்றாா்.

ADVERTISEMENT

முதல்வா் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையப் பகுதியிலும், திருச்சி-கரூா் நெடுஞ்சாலையிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT