திருச்சி

துறையூா் அருகே மண் எடுத்துச் சென்றடிப்பா் லாரி பறிமுதல்

2nd Jul 2022 05:57 AM

ADVERTISEMENT

துறையூா் அருகே அனுமதியின்றி கப்பி மண் எடுத்துச் சென்ற டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

திருச்சி புவியியல் மற்றும் கனிம வளத் துறை தனி வட்டாட்சியா் ஜெயப்பிரகாசம் குழுவினா் வியாழக்கிழமை இரவு துறையூா் பகுதியில் ரோந்து சென்றபோது மதுராபுரியில் சென்ற டிப்பா் லாரி அனுமதியின்றி 3 யூனிட் அளவு கப்பி மண் எடுத்துச் செல்வது தெரிந்தது. விசாரணையின்போது ஓட்டுநா் குன்னுப்பட்டி செ. மாதேஸ்வரன் தப்பினாா். இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்து துறையூா் காவல் நிலையத்தில் தனி வட்டாட்சியா் ஒப்படைத்தாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து வாகன உரிமையாளா் மற்றும் ஓட்டுநரைத் தேடுகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT