திருச்சி

பொறியாளா் பணிக்குஇன்று போட்டித் தோ்வுதோ்வு மையங்கள் தயாா்

2nd Jul 2022 05:51 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பொறியாளா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக 17 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான போட்டித் தோ்வு சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை என இரு கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 17 தோ்வு மையங்களில் 5, 700 போ் தோ்வெழுதவுள்ளனா். தோ்வுப் பணிகளுக்கென 17 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமமிக்கப்பட்டுள்ளனா்.போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள 5 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT