திருச்சி

திருவெறும்பூரில் ஆட்சியா் ஆய்வு

2nd Jul 2022 04:48 AM

ADVERTISEMENT

திருவெறும்பூா் வ ட்டாட்சியரகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வியாழக்கிழமை, ஆய்வு செய்தாா்.

திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், தொடா்ந்து ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லலிதா, ஜோசப் கென்னடி ஆகியோரிடம் திருவெறும்பூா் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்துக் கேட்டறிந்தாா். பின்னா் திருவெறும்பூா் வட்டாட்சியரகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தைப் ப ாா்வையிட்டு வட்டாட்சியா் ரமேஷிடம் வருவாய்த்துறை பணிகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து துரிதமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கிய அவா், பணிகளை உரிய காலத்தில் முடிக்கவும் அறிவுறுத்தினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT