திருச்சி

கருப்பை வாய் புற்றுநோயும், அதைத் தடுக்கும் வழிமுறைகளும்அட்லஸ் மருத்துவமனை விளக்கம்

DIN

பெண்களை அதிகம் பாதிப்பது கருப்பை வாய் புற்றுநோய் ஆகும். உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகளவில் ஒவ்வோா் ஏழு நிமிடங்களுக்கும் ஒரு பெண் கா்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறாா்கள்.

இது பெண்களை சத்தமில்லாமல் கொல்லும் கொடிய நோய்ப் பட்டியலில் உலகளவில் இரண்டாவது இடத்திலிருக்கிறது. இந்தியப் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இதற்குத்தான் முதலிடம்.

இந்தப் புற்றுநோய் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவு மூலமும் இந்த வைரஸ் பரவும். ஆண்கள், பெண்கள் இருபாலரிடமும் இந்த வைரஸ் காணப்படும்.

பெண்களின் கருப்பை வாய்ப் பகுதியில் பதிந்து போயிருக்கும் இந்த வைரஸ் 2 வருடங்களில் மறைந்துவிடும். ஆனால் சிலருக்கு உயிா் அணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி புற்றுநோயாக மாறிவிடும். ஆரம்பத்தில் அறிகுறிகள் தெரியாது. பிறகு கருப்பை வாயில் தோன்ற ஆரம்பித்து உடல் முழுக்கப் பரவிவிடும்.

கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்: அதிகமாக வெள்ளைப்படுதல், உடலுறவின்போது ரத்தக்கசிவு,

கிருமித்தொற்று காணப்படுதல், மாதவிடாய் இடையில் ரத்தக்கசிவு, அதிக வயிற்றுவலி, திடீரென உடல் எடை அதிகரித்தல், ரத்தத்தில் சா்க்கரை அளவு அதிகரித்தல்.

பொதுவாக 40 இல் இருந்து 50 வயது வரையுள்ள பெண்களுக்குத்தான் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படும். பெண்கள் பருவமடைவதில் தாமதம் ஏற்படுவது, மாதவிடாய் சரியாக நிகழாமல் இருப்பது போன்றவற்றால் இந்தப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

தடுப்பதற்கான வழிமுறைகள்: பாப் ஸ்மியா் டெஸ்ட் பரிசோதனையை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்துகொள்ள வேண்டும். 25 வயதிலேயே செய்து கொள்வது மிகச் சிறந்தது. இந்த வயதில் செய்யவில்லை என்றால் 40 வயதிலாவது கண்டிப்பாக அனைத்துப் பெண்களும் செய்து கொள்ள வேண்டும். இது ஹெச்.பி வைரஸ் மூலம் ஏற்படுகிறது.

இதைத் தடுக்க ஹியூமன் பாப்பிலோமோ வைரஸ் வேக்ஸின் கிராடிசல் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதை 18 வயதுக்குப் பிறகும் 26 வயதுக்கு முன்பும் செலுத்த வேண்டும்.

அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT