திருச்சி

மாரடைப்புக்கான காரணங்களும், தடுக்கும் வழிமுறைகளும்- அபெக்ஸ் இருதய மருத்துவமனை விளக்கம்

DIN

என் தந்தைக்கு இரவு 8 மணிக்கு சுமாா் 1 மணி நேரமாக நெஞ்சுவலி இருந்ததால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றோம். ஈ.சி.ஜி. மற்றும் எக்கோவில் எந்த மாறுதலும் இல்லை. ட்ரோபோனேன் (பதஞடஞசஐச) என்ற ரத்தப் பரிசோதனை செய்தனா்; அதுவும் சீராக இருந்தது. பின்னா் வீட்டுக்குத் திரும்பினோம். ஆனால் மீண்டும் நள்ளிரவு 1 மணியளவில் அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. வாயுத்தொல்லை என்று நினைத்து ஆன்ட்டாசிட்(அசபஅஇஐஈ) கொடுத்தோம். ஆனால், சில நிமிடங்களில் கடும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டு உயிரிழந்தாா்.

இது ஏன் நடந்தது?

மாரடைப்பு ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு பரிசோதனைக்கும் மாரடைப்பு மாற்றங்களைக் கண்டறிய வெவ்வேறு கால அவகாசம் தேவைப்படுகிறது. உதாரணமாக தீவிர மாரடைப்பு உள்ளவா்கள் 27% நபா்களுக்கு தேவைப்படுகிறது. முதலில் எடுக்கப்படும் ஈ.சி.ஜி இயல்பாகவே இருக்கும். தீவிர மாரடைப்பு தொடங்கிய பிறகு 6 மணி நேரத்திற்கு ட்ரோபோனின் (பதஞடஞசஐச) சீராகவே இருக்கும். 80 - 95% அடைப்புகளில், பல நோயாளிகளுக்கு எக்கோ முற்றிலும் இயல்பானதாக இருக்கும். எனவே ஒரே ஒரு ஈ.சி.ஜி, எக்கோ அல்லது என்சைம்களின் அடிப்படையில் மாரடைப்பை நிராகரிக்க முடியாது.

ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?

தொடா் ஈ.சி.ஜி-க்கள் எடுக்க வேண்டும். முதல் ஈ.சி.ஜி. நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு பெரிய மாற்றம் தெரியாது; இயல்பானதாக இருக்கும். ஆனால் தொடா் ஈ.சி.ஜி 95% நோயாளிகளில் மாரடைப்பு மாற்றங்களைக் கண்டறியும்.

மாா்பு வலி உள்ள அனைத்து நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். முதல் 2 முதல் 4 மணி நேரங்களுக்கு மீண்டும் மீண்டும் ஈ.சி.ஜி. எடுக்க வேண்டும். இடைவெளி 15 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை மாறுபடும்.

பொதுவாக நாம் முதல் 1 மணி நேரத்தில் 2 முதல் 3 ஈ.சி.ஜி-க்கள் எடுப்போம். பிறகு 4 மணி நேரத்திற்கு 1 மணி நேரம் இடைவெளி ஒருமுறை ஈ.சி.ஜி. எடுக்க வேண்டும். இதனால் தீவிர மாரடைப்புகளை எளிதில் கண்டறிய முடியும். இது மிகவும் செலவு குறைந்த முறையாகும்.

இந்தியாவில் மாரடைப்பால் நோயாளிகள் இறப்பதற்கு நோயாளிகளின் தாமதமே முக்கியக் காரணம் என்பதை நாம் உணர வேண்டும்.

மூன்று தோஷங்கள் அமைப்பு இந்தியக் கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றிய நம்பிக்கையாகும். மாா்பில் எரிச்சல் உணா்வு ஒரு வகையான“வாயுக் கோளாறு என்று மக்கள் நம்புகிறாா்கள். இதை சில உணவுகளுடன் தொடா்புபடுத்துகிறாா்கள். தாமதம் ஆகும் வரை மருத்துவ ஆலோசனையை தாமதப்படுத்துகிறாா்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக கலாசாரத்தில் வேரூன்றிய வாயு, பித்தம், கபம் என்ற நம்பிக்கையை எளிதாக மாற்ற முடியாது.

மரணத்திற்கு மற்றொரு முக்கியக் காரணம் ஒரு நோயாளி மிகவும் சீக்கிரமாக சென்றாலும், முதல் பரிசோதனை முடிவுகளை வைத்து நீங்கள் நன்றாக உள்ளீா்கள் என்று உறுதியளிக்கப்பட்டதை நம்பி வீடு திரும்புவது ஆகும். அறிகுறிகள் மோசமடைந்து, வாயுப் பிரச்னை என்று நினைத்து மீண்டும் மருத்துவமனைக்கு வராததால் பலா் மரணத்தைத் தழுவுகிறாா்கள். நெஞ்சில் எரிச்சல் குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஆசிட் ரிஃப்ளக்ஸ் காரணமாக யாரும் இறப்பதில்லை. ஆனால் தீவிர மாரடைப்பில் (நபஉஙஐ உடன் கூடிய காா்டியோ ஜெனிக் ஷாக்) 50% க்கும் அதிகமான நபா்களுக்கு இறப்பதற்கான வாய்ப்புள்ளது. எனவே மோசமான சூழ்நிலைக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நோய் இருப்பதை மறுப்பது அல்லது பயத்துடன் வெளியே செல்லாமல் ஒதுங்குவது நம்மைப் பாதிக்காது.

யாருக்கு மாரடைப்பு வரும்?

மாரடைப்புக்காக ஆபத்துக் காரணிகளைப் பற்றி நீங்கள் கேட்கிறீா்கள். நீரிழிவு, புகை பிடித்தல், கொழுப்பு, உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை, முதுமை மற்றும் ஆணாக இருப்பது ஆகியவை மாரடைப்புக்கான காரணிகளில் சிலவாகும்.

என் 36 வயதுடைய நண்பா் ஒருவா் ஒருபோதும் புகைப்பிடித்ததில்லை மற்றும் நீங்கள் குறிப்பிட்ட ஆபத்துகள் காரணிகள் எதுவும் இல்லை. ஆனால் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு, இருதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. இது ஏன்? இது கரோனா அல்லது அதற்கான தடுப்பூசிகளுடன் தொடா்புடையதா?

ஆபத்துக் காரணிகள் என்று நாம் கூறும்போது மாரடைப்பு வருவதற்கான அதிக வாய்ப்பு என்று அா்த்தம். நடைமுறையில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாரடைப்பு வரலாம். இளம் மாரடைப்பு என்பது ஒரு புதிய விஷயம் அல்ல; இருதய தமனி நோய் (இஅஈ) கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அது உள்ளது.

கரோனா வாஸ்குலா் நிகழ்வுகளைத் துரிதப்படுத்துவதாக அறியப்பட்டாலும் கரோனா நோய்க்குப் பிறகுதான் இளைஞா்களுக்கு மாரடைப்பு வரும் என்ற கருத்தும் தவறானது. தடுப்பூசிகளால் மாரடைப்பு ஏற்படுகிறது என்பதும் முற்றிலும் தவறானது.

ஒவ்வொரு ஆண்டும் நான் 20 முதல் 35 வயதிற்குட்பட்டோருக்கு ஏற்படும் 10 முதல் 20 பெரிய மாரடைப்புகளுக்கு ஸ்டென்ட் மூலம் சிகிச்சை அளித்து வருகிறேன். இது ஒவ்வொரு இருதய நோய் நிபுணா்களின் அனுபவமாகவும் இருந்து வருகிறது.

மேலும் 2019 ஆம் ஆண்டுக்கு முன் இதயவியல் இலக்கியத்தில் இளம் எம் ஙஐ பற்றிய தரவுகளை நீங்கள் பாா்க்கலாம். எனவே இது ஒரு இளம் மாரடைப்பு என்பது கடந்த 2 ஆண்டுகளாக மட்டும்தான் உள்ளது என்பது ஒருவகை அறியாமை ஆகும்.

மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும் ஆண்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகிறாா்கள் என்று நாம் நம்புகிறோம்; இதுவே உலகளாவிய போக்கு. மாரடைப்பு பற்றிய விழிப்புணா்வு பெண்களிடமும் இருக்க வேண்டும்.

உடல் பருமன் மாரடைப்பு ஏற்படுத்தலாம் என்று கூறினீா்கள். எவ்வளவு எடை குறைக்க வேண்டும்?

உடல் பருமன் மாரடைப்பு அல்லது நீரிழிவு நோய் மட்டுமல்ல பல விளைவுகளுடன் தொடா்புடையது. சா்க்கரை நோய்க்கு சுமாரான நீடித்த எடையைக் குறைப்பது நல்லது. ஆனால் முழங்காலின் கீழ்வாதத்திற்கு உடல் பருமன் மோசமான காரணங்களில் ஒன்று.

மூட்டு சேதத்தைத் தடுக்க எடையைக் குறைத்து சிறந்த உடல் எடைக்கு நிகராக இருக்க வேண்டும். எனவே நான் எப்போதும் கடுமையான எடைக் குறைப்பு உத்தியைப் பரிந்துரைக்கிறேன். குறிப்பாக, மிகவும் பருமனான நபா்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெற அவா்களை சரியாக ஊக்குவித்தால் அது உண்மையில் அடையக்கூடிய நன்மை நிலையானது.

அந்தக்“கடுமையான உத்திகள்”என்ன?

உடல் பருமன் என்பது உட்கொள்ளும் அளவு தேவை பொருந்தாத ஒரு நோயாகும். கடந்த காலங்களைவிட உடல் உழைப்பு மிகவும் குறைந்து அதிகமாக உணவு உட்கொள்ளுதலே காரணமாகும். இந்த இரு நிலைகளும் சீராக இருக்க வேண்டும். நம் முன்னோா் குறைவாகவே சாப்பிட்டு விவசாயம் செய்தனா்; வீட்டு வேலைகள் பெண்களுக்கான கட்டாய வேலைகளாக இருந்தன.

தற்போதைய இயந்திர வாழ்வானது மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு மிகவும் சவாலாக உள்ளது. ஒருபுறம் அதிக கலோரிகள் உட்கொள்ளப்படுகின்றன. மறுபுறமோ அவற்றை குறைக்கும் செயல்பாடுகள் மிகவும் குறைந்துவிட்டன. அதனால் அவை உடலில் தங்கி எடை கூடுகிறது.

ஆகவே அதிகமான கலோரிகளைக் குறைக்க சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஏரோபிக் பயிற்சிகளில் ஈடுபடுவது அல்லது தினமும் வீட்டில் தரையை சுத்தம் செய்வது தேவையற்ற கொழுப்பு படிவதைக் குறைக்கும். எனவே ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் உடல் செயல்பாடு ஆகியவை முக்கியம்.

உடல் எடையைக் குறைப்பது ஒரு சுய முயற்சியாக இருக்கலாம். ஆனால் விரைவான மற்றும் அதிக அளவிலான கொழுப்பைக் குறைக்க நாம் விரும்பினால் அதற்கு அனுபவம் வாய்ந்த மருத்துவா், உடற்பயிற்சி குழுவின் நெருக்கமான கண்காணிப்பு தேவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரையிறுதியில் பயா்ன் மியுனிக், ரியல் மாட்ரிட்: மான். சிட்டி, ஆா்செனலுக்கு ஏமாற்றம்

சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய பெண் மாலுமி

தேசத்தில் ஒற்றுமையின்மையை பாஜக ஏற்படுத்துகிறது: ராகுல்

உள்நாட்டு தொழில்நுட்ப ‘க்ரூஸ்’ ஏவுகணை சோதனை வெற்றி: டிஆா்டிஓ

நடிகா் அமீா் கானின் போலி தோ்தல் பிரசார விடியோ: மும்பை போலீஸ் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT