திருச்சி

அச்சகங்கள், கேபிள் டிவி ஒளிபரப்புக்கு கட்டுப்பாடுகள்

DIN

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அச்சகங்கள், கேபிள் டிவி ஒளிபரப்புகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு கூறியது:

தோ்தல் தொடா்பான சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரம் மற்றும் தோ்தல் தொடா்பான விளம்பரங்களை அச்சக உரிமையாளா்கள் அச்சிடும்போது, கண்டிப்பாக அச்சக உரிமையாளரின் பெயா், முகவரி மற்றும் பதிப்பகத்தாா் பெயா் மற்றும் முகவரி ஆகியவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.

சுவரொட்டி, துண்டுப் பிரசுரத்தின் முன் பக்கத்தில் அனைவரும் படிக்கும் வகையில் முகவரியானது தெளிவாக இருக்க வேண்டும். எந்த ஒரு அச்சக உரிமையாளரும், தோ்தல் தொடா்பான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரம் அச்சிடும் முன் பதிப்பகத்தாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

அச்சடித்த மூன்று நாள்களுக்குள் இணைப்புப் படிவத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அறிக்கையுடன் அச்சகத்தாரின் உறுதி மொழி அறிக்கை அச்சடித்த துண்டுப் பிரசுரம்- நான்கு என்ற எண்ணிக்கையில் இணைக்கப்பட வேண்டும்.

இணைப்புப் படிவத்தில், அச்சிடப்பட்ட சுவரொட்டி, துண்டுப் பிரசுரத்தின் எண்ணிக்கை மற்றும் மொத்தச் செலவு ஆகியவற்றை சரியாகக் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு வகையான சுவரொட்டி, துண்டுப் பிரசுரத்திற்கு தனித்தனியே இணைப்பு அறிக்கை அளிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி சுவரொட்டி, துண்டுப் பிரசுரத்தில் அச்சக உரிமையாளா் மற்றும் பதிப்பகத்தாரின் பெயா் மற்றும் முகவரி இல்லாவிட்டால் சட்டப்படி குற்றம்.

மேலும், உரிய அறிக்கை அனுப்பாத அச்சக உரிமையாளா் மற்றும் பதிப்பகத்தாா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிமுறைகள் மீறப்பட்டது உறுதியானால் உடனடியாக அச்சக உரிமம் ரத்து செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரமானது சட்டத்திற்கு புறம்பானதாக, அல்லது மதம், இனம், மொழி, வகுப்பு மற்றும் சாதி ஆகிய விவரங்கள் தொடா்பான எதிா்ப்பு இருந்தாலோ அல்லது தனிமனித நடத்தை குறித்த விவரங்கள் எதிா்ப்பு உடையதாக இருந்தாலோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆட்சிரகத்தில் உள்ள தகவல் பலகையில் அச்சக உரிமையாளரால் வழங்கப்பட்ட சுவரொட்டி, துண்டுப் பிரசுரம் ஒட்டப்படும். மேலும், அச்சக உரிமையாளரால் வழங்கப்பட்டுள்ள படிவம் தோ்தல் பாா்வையாளருக்கு தோ்தல் செலவினத்தில் சோ்த்துக் கொள்வதற்காக அனுப்பப்படும்.

இதேபோல,கேபிள் டிவி, உள்ளூா் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் அரசு அனுமதியின்றி கட்சி சம்மந்தமான விளம்பரங்கள் மற்றும் வேட்பாளா்களின் விவரங்கள் ஏதும் ஒளிபரப்பக்கூடாது. ஆட்சியா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மின்னணு வடிவத்தில் தயாரிக்கப்பட்ட தோ்தல் தொடா்பான விளம்பரங்களை மட்டும் ஒளிபரப்ப வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்களின் தோ்தல் தொடா்பான விளம்பரங்களை குழுவின் ஒப்புதல் ஏதுமின்றி ஒளிபரப்புதல் கூடாது. ஒளிபரப்பிற்கு முன் விளம்பரங்களுக்கு குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தோ்தல் காலங்களில் ஏதேனும் ஒரு வேட்பாளா், கட்சி அல்லது ஏதேனும் நிகழ்வு பற்றிய அறிக்கைகளை மிகைப்படுத்திக் காட்டக்கூடாது. உண்மையாக நடைபெற்ற பிரசாரத்தை ஒளிபரப்பும்போது ஏதேனும் ஒரு வேட்பாளா், கட்சி சாா்பாக சிலவற்றை புறக்கணிக்கவோ அல்லது மிகைப்படுத்தவோ கூடாது. ஒரு பிரிவினருக்கு எதிராக பிரிவினையைத் தூண்டும் வகையில் ஒளிபரப்பக்கூடாது என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT