திருச்சி

குழுமணியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

DIN

திருச்சியை அடுத்துள்ள குழுமணியில் தமிழக அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நெல் அறுவடை நடைபெறும் கிராமங்களில் விவசாயிகளின் தேவைக்கேற்ப தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

அந்த வகையில் அந்தநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட குழுமணியில் சிவன் கோயில் அருகே அமைக்கப்பட்ட கொள்முதல் நிலையத்தை, குழுமணி ஊராட்சித் தலைவா் கல்யாணசுந்தரம் திறந்து வைத்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவ.சூரியன், உய்யக்கொண்டான் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பிரசன்னா மற்றும் சுற்றுப் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனா்.

இந்த கொள்முதல் நிலையத்தில், கோப்பு, அயிலாப்பேட்டை, குழுமணி, எட்டரை, பேரூா், புலிவலம், கொடியாலம், சீராத்தோப்பு, மேல்குடி மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படவுள்ளது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அயிலை சிவசூரியன் கூறியது:

மாவட்டத்தில் 34−இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்க முடிவெடுக்கப்பட்டு படிப்படியாக திறக்கப்படுகின்றன. விவசாயிகள் நலன் கருதி கூடுதல் இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறந்து விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மண்ணச்சநல்லூா் வட்டம் விடுபட்டுள்ளது. மண்ணச்சநல்லூா் வட்டத்தில் கிளியநல்லூா் மற்றும் மாதவபெருமாள் கோவில் பகுதிகளில் கடந்த காலங்களில் செயல்பட்ட கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். அந்தநல்லூா் ஒன்றியத்தில் திருப்பராய்துறை அல்லது திருச்செந்துறை, முத்தரசநல்லூா் அல்லது பழூா், மணிகண்டம் ஒன்றியத்தில் அதவத்தூா் அல்லது அல்லித்துறை, தொட்டியம் வட்டத்தில் சீனிவாசநல்லூா் ஆகிய பகுதிகளில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து எதற்காகவும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT