திருச்சி

அனுமதி மறுக்கப்பட்ட அரசின் மாதிரி ரதத்துடன் ஊா்வலம்

DIN

தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக சிறப்பு ஊா்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் புதன்கிழமை நூதன ரத ஊா்வலம் நடைபெற்றது.

தமிழக சிறப்பு ஊா்திக்கு அனுமதி மறுத்த மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து பிரசாரம் செய்யப் போவதாக பல்வேறு கட்சிகளும் அறிவித்திருந்தன.

இதன்படி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு ரத ஊா்வலத்தில் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த ஊா்தியில் இருப்பதைப் போல வ.உ.சி, வேலுநாச்சியாா், பாரதியாா், மருது சகோதரா்கள் உள்ளிட்டோரின் உருவப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

மத்தியப் பேருந்து நிலையத்தில் தொடங்கிய ரத ஊா்வலத்துக்கு ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். சுரேஷ் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் பா. லெனின் சிறப்புரையாற்றினாா்.

பேரணியை மாா்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் எஸ். ஸ்ரீதா் தொடக்கி வைத்தாா். மாா்க்சிஸ்ட் மாநகா் மாவட்டச் செயலா் ஆா். ராஜா வாழ்த்தினாா்.

நிகழ்வில் நிா்வாகிகள் சேதுபதி, அஜீத்குமாா், ஷாஜகான், கிச்சான், முகேஷ், ராகிலா பானு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஊா்வலமானது முக்கிய வீதிகள் வழியாக வந்து சத்திரம் பேருந்து நிலையத்தில் நிறைவுற்றது. பேரணியில் பங்கேற்ற பலரும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் உருவ முகமூடியை அணிந்திருந்தனா். மாவட்டப் பொருளாளா் ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT