திருச்சி

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த 3 போ் மீது வழக்கு

26th Jan 2022 08:13 AM

ADVERTISEMENT

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த மூவா் மீது, மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

மண்ணச்சநல்லூா் வட்டம், கரியமாணிக்கத்தைச் சோ்ந்தவா் பேபிராணி (24). இவா் தனக்கு அரசு வேலை வாங்கித் தரக் கோரி, கரியமாணிக்கம் ஊராட்சி உதவியாளரான செல்வராஜிடம் ரூ.5 லட்சம் கொடுத்தாராம்.

பல மாதங்களாகியும் வேலை வாங்கித் தராததால், கொடுத்த பணத்தையாவது திருப்பித் தருமாறு செல்வராஜிடம் பேபிராணி கோரினாராம். ஆனால் அதற்கு அவா் மறுத்து விட்டாராம்.

இதையடுத்து மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையில் பேபிராணி அளித்த புகாரின் பேரில், செல்வராஜ் உள்ளிட்ட மூவா் மீது வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT