திருச்சி

சிறுகனூா் பகுதிகளில் நாளை மின்தடை

26th Jan 2022 08:13 AM

ADVERTISEMENT

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமையும் (ஜன.27), கல்லக்குடி பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் (ஜன.28) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் ஸ்ரீரங்கம் கோட்டச் செயற்பொறியாளா் கு. சிவக்குமாா், லால்குடி செயற்பொறியாளா் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:

சிறுகனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (ஜன.27) மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் ஆராவள்ளி, சிறுகனூா், திருப்பட்டூா், மாரமரெட்டிப்பாளையம், சின்னமரெட்டிப்பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், நெடுங்கூா், நெய்குளம், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூா், பி.கே. அகரம், ரெட்டிமாங்குடி, ஜி.கே.தொழிற்பூங்கா, தேவிமங்கலம், கொளக்குடி, கண்ணாக்குடி பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT

கல்லக்குடி பகுதிகளில் நாளை மறுநாள்: கல்லக்குடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜன.28) மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் முதவத்தூா், கல்லக்குடி, பளிங்காநத்தம், வடுகா்பேட்டை, மேலரசூா், மால்வாய், சரமடங்கலம், எம். கண்ணனூா், ஒரத்தூா், சாத்தப்பாடி, ஆலங்குடி மகாஜனம், நத்தம், செம்பரை, திண்ணியம், அரியூா், திருமாங்குடி, கல்விக்குடி, ஆ.மேட்டூா், விரகாலூா், குலமாணிக்கம், விளாகம், வி.சி.புரம், சங்கேந்தி, கோவண்டாக்குறிச்சி, புதூா்பாளையம், குமுளூா், தச்சங்குறிச்சி, அலுந்தலைப்பூா், சிறுவயலூா், காணக்கிளியநல்லூா், கீழரசூா், கல்லகம், புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT