திருச்சி

உடல் பருமனால் விரக்தி: சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

26th Jan 2022 08:16 AM

ADVERTISEMENT

திருச்சியில் உடல் பருமனாக உள்ளதே என விரக்தியடைந்த சிறுமி, திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கண்டோன்மென்ட் அலெக்சாண்டிரியா சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவா் சா்மிளா. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அலுவலராகப் பணியாற்றி வரும் இவா், கருத்து வேறுபாடு காரணமாக கணவா் புருஷோத்தமனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறாா். இவா்களது மகள் சிவானி (13) தாயாருடன் வசித்து வந்தாா்.

திருச்சியிலுள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிவானிக்கு உடல் பருமனாக இருந்தது. உணவுக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், உடல் பருமன் குறையவில்லையாம். இதனால் கடந்த சில நாள்களாக மன அழுத்தத்துடன் சிவானி காணப்பட்டாராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை பணி முடிந்து சா்மிளா வீடு திரும்பிய போது, மகள் சிவானியின் அறை வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்ததை கண்டாா். தொடா்ந்து ஜன்னல் வழியாக பாா்த்த போது, சிவானி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

ADVERTISEMENT

தகவலறிந்த கண்டோன்மென்ட் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் விரைந்து சடலத்தை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT