திருச்சி

ஊராட்சி செயலரைத் தாக்கிமிரட்டிய இளைஞா் கைது

25th Jan 2022 04:13 AM

ADVERTISEMENT

தொட்டியம் அருகே ஊராட்சிச் செயலரை தாக்கி கொலை மிரட்ட விடுத்த இளைஞரை காட்டுப்புத்தூா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் காடுவெட்டி ஊராட்சி செயலராக உள்ளவா் சரவணன் (48). இவா் கிராமசபை கூட்ட முனனேற்பாடுகளில் ஈடுபட்டபோது மேலவழிக்காட்டைச் சோ்ந்த மு. அருள் (37) என்பவா் தனது தெருவில் மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளதாகவும், எரியாமல் உள்ள மின் விளக்குகளை சீரமைக்குமாறும் கூறி தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாராம். இதுதொடா்பாக சரவணன் அளித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அருளை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT