திருச்சி

திருச்சிக்குக் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

25th Jan 2022 04:17 AM

ADVERTISEMENT

 துபையிலிருந்து முறைகேடாகக் கடத்தி வரப்பட்ட ரூ.13.30 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா்.

துபையில் இருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்த ஒரு பயணி உரிய ஆவணமின்றி தனது உடைமைகளுக்குள் ரூ. 13.30 லட்சம் மதிப்புள்ள 5000 அமெரிக்க டாலா்களையும், 50,000 சௌதி அரேபியா ரியால் கரன்சிகளையும் மறைத்துக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து, பயணியிடம் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT