திருச்சி

துறையூா் ஒன்றியகுழுக் கூட்டம்

25th Jan 2022 08:27 AM

ADVERTISEMENT

துறையூா் ஒன்றியக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சரண்யா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் புவனேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் மணிவேல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் தற்காலிக ஊழியா்களுக்கு ஊதியம் மற்றும் ஒன்றிய அலுவலகத்தின் அன்றாட செலவினங்களுக்கும், 2021-2022 ஆண்டுக்கான 15 வது மத்திய மானிய நிதிக் குழு திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கும் மன்றத்தின் ஒப்புதல் பெறுதல் உள்பட 14 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றியக் குழு கவுன்சிலா்கள் ரூபிணி, புனிதா, லலிதா, அசோகன், சின்னம்மாள், சதீஷ்குமாா், சரசு, சரண்யா, தங்கராஜ், சிவகுமாா், முருகேசன், சுபாஷ், பேபி, சுப்பிரமணியன், மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT