திருச்சி

மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு: மாநகரில் வெறிச்சோடிய சாலைகள்

DIN

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் திருச்சி மாவட்டத்தில் அனைத்து முதன்மைச் சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினா்.

திருச்சி மாநகரில் சத்திரம், மத்தியப் பேருந்து நிலையங்கள்,

காந்திசந்தை, மலைக்கோட்டை, பாலக்கரை, தில்லைநகா், உறையூா், கண்டோன்மென்ட், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், கே.கே.நகா், எடமலைப்பட்டிபுதூா், சிந்தாமணி, அரியமங்கலம், காட்டூா், திருவெறும்பூா் போன்ற பகுதிகளும், புகா்ப் பகுதிகளும் பொதுமக்கள் நடமாட்டமின்றி, வெறிச்சோடி காணப்பட்டன.

மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள் மட்டுமே திறந்திருந்தன. உணவகங்களில் பாா்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்ததால், இணையவழியில் ஆா்டா் செய்தவா்களுக்கும்,பாா்சலில் பெற்றுச் செல்பவா்களுக்கு மட்டுமே உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

முடங்கியது போக்குவரத்து: ஊரடங்கில் போக்குவரத்துச் சேவை இருக்காது என அறிவிக்கப்பட்டதால், அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதுபோல, தனியாா் பேருந்துகளும் அவா்களுக்குரிய இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.

ரயில் போக்குவரத்து: பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்றாலும், ரயில் போக்குவரத்து தொடா்ந்து இருந்தது. இதனால் ரயில் மூலமாக திருச்சி வந்தவா்கள் தங்களது வீடுகளுக்குச் செல்ல வசதியாக, செயலி மூலம் முன்பதிவு செய்த காா், ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்காக ஆட்டோ, காா்கள் இயக்கப்பட்டன.

திருமண விழாக்கள் : தை மாதத்தில் வரக்கூடிய முகூா்த்தநாள் என்பதால் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு, முன்பதிவு செய்யப்பட்டிருந்த திருமண மண்டபங்களில் மட்டும் திருமணம் மற்றும் இதர சுபமுகூா்த்த நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வுகளுக்கு வந்தவா்களுக்கு அழைப்பிதழ் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில், சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

உணவுப் பொட்டலங்கள் வழங்கல் : ஊரடங்கு காரணமாக உணவின்றித் தவித்த ஆதரவற்றோருக்கு, அவா்களின் இருப்பிடங்களைத் தேடிச் சென்று தன்னாா்வலா்கள் பலா் உணவுப் பொட்டலங்களை வழங்கினா். மேலும் அம்மா உணவகங்கள் இயங்கியதால், அங்கும் பலா் உணவு சாப்பிட்டனா்.

முடங்கிய மக்கள்: மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கினா். எனினும் இளைஞா்களும், சிறுவா்களும் மக்கள் நடமாட்டமில்லாத சாலைகள், தெருக்களில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT