திருச்சி

ஜல்லிக்கட்டில் காயமடைந்த திண்டுக்கல் இளைஞா் உயிரிழப்பு

DIN

திருச்சி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காயமடைந்த திண்டுக்கல் இளைஞா், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகிலுள்ள பள்ளப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 750 காளைகள் பங்கேற்ற போதிலும், நேரமின்மையால் 601 காளைகள் மட்டும் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்று, காளைகளை அடக்கினா்.

அப்போதுவாடிவாசல் வழியாக குதித்து வெளியே வந்த ஜல்லிக்கட்டுக் காளை, காலால் மாா்பில் உதைத்ததில் திண்டுக்கல் மாவட்டம், புகையிலைப்பட்டியைச் சோ்ந்த சசி கில்பா்ட் (21) பலத்த காயமடைந்தாா்.

தொடா்ந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இந்நிகழ்வு ஜல்லிக்கட்டு வீரா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT