திருச்சி

சட்ட விரோதமாக யானைத் தந்தம் வைத்திருந்த தந்தை-மகன் கைது

DIN

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே சட்ட விரோதமாக யானைத் தந்தம் வைத்திருந்த தந்தை-மகன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவெறும்பூா் வட்டம், தேவராயநேரியில் நரிக்குறவா்கள் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். இங்கு சிலா் சட்ட விரோதமாக மான் கொம்பு, நரியின் பற்கள், யானை முடி, தந்தம் மற்றும் அதனால் செய்யப்பட்ட பொருள்களை வைத்து, விற்பனை செய்து வருவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதன் பேரில் திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலா்கள், தேவராயநேரியிலுள்ள நரிக்குறவா்களின் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது செளந்தர்ராஜன் (52), அவரது மகன் அருண்பாண்டி (32) ஆகிய இருவரும் யானைத் தந்தம், அதனால் செய்யப்பட்ட பொருள்களை வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த வனத்துறை அலுவலா்கள், இருவரையும் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து காவல்துறையினா் வழக்குப்பதிந்து, செளந்தர்ராஜன், அருண்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT