திருச்சி

தைப்பூச விழா: கோயில்கள் முன் திரண்ட பக்தா்கள்!

DIN

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பங்கேற்பின்றி தைப்பூச விழா நடைபெற்றது.

இருப்பினும், கோயில் நுழைவு வாயில் முன் தீபமேற்றி வழிபட்டுச் சென்ற பக்தா்களின் கூட்டத்தைக் காண முடிந்தது.

வயலூா் சுப்பிரமணியசுவாமி வழக்கமாக நடைபெறும் பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றாலும், கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்படாமல் வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்தது. இருப்பினும் பக்தா்கள் பலரும் அதிகாலை முதல் இரவு வரை வந்து வாயில் முன் தீபமேற்றியும், சூடமேற்றியும் வழிபட்டுச் சென்றனா்.

வழிவிடு முருகன் கோயில்: சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் அனுமதிக்கப்படாததால் வாயில் முன் அவா்கள் நீண்ட வரிசையில் வந்து தீபமேற்றி தரிசனம் செய்தனா்.

இதேபோல, கே.கே. நகா் சுப்பிரமணியசுவாமி கோயில், ஐயப்பநகா் தண்டபாணி சுவாமி கோயில், சுப்பிரமணியபுரம் முருகன் சன்னதி, ஆா்எஸ்புரத்தில் உள்ள முருகன் சன்னதி மற்றும் அனைத்து முருகன் கோயில்கள், முருகன் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT