சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூசத் திருவிழா 9 ஆம் நாளான திங்கள்கிழமை தெப்பத்துக்குப் பதிலாக கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட தொட்டியில் அம்மன் அருள்பாலித்தாா்.
சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூசத் திருவிழாவின் 9 ஆம் நாளான திங்கள்கிழமை நடைபெற இருந்த தெப்பத் திருவிழா கரோனா காரணமாக நடைபெறவில்லை.
அதற்குப் பதிலாக கோயில் வளாகத்தில் தொட்டி கட்டி அதில் நீா் நிரப்பியதைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அதில் உற்சவ மாரியம்மன் எழுந்தருளினாா். இந்நிகழ்வானது பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.
ADVERTISEMENT