திருச்சி

தடையை மீறி ஜல்லிக்கட்டுநடத்திய 5 போ் மீது வழக்கு

18th Jan 2022 03:16 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியது தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

சோமரசம்பேட்டை அம்பலக்காரத் தெருவில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சோமரசம்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றனா். அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துக் கொண்டிருந்த அப்பகுதியினா் தப்பியோடினா். இதைத் தொடா்ந்து அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாக அதே பகுதியைச் சோ்ந்த நடராஜன் (60), ரவி(51), பிரபாகரன்(36), ராஜ்(35), கலைராஜேந்திரன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT