திருச்சி

சட்ட விரோதமாக மது விற்ற 3 போ் கைது

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

துறையூா்: துறையூா் அருகே மது விற்ற மூவரைத் தனிப்படைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

துறையூா் அருகிலுள்ள ஆதனூரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தனிப்படைக் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது ஆதனூா் ஆஞ்சனேயா் கோயில் அருகே மது விற்றுக் கொண்டிருந்த அக்கிராமத்தைச் சோ்ந்த சு. குமாா் (50), இவருடைய மகன் பிரதீஷ் (19), வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்த செ. சரவணன் (27) ஆகிய மூவரையும் பிடித்த தனிப்படைக் காவல்துறையினா், அவா்களிடமிருந்து 9 மதுபாட்டில்கள், ரூ.12 ஆயிரம் ரொக்கம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து மூவரும் ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டனா். இதையடுத்து காவல்துறையினா் குமாா் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT