திருச்சி

இல்லம் தேடித் துணிப்பைகள் விநியோகம்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருச்சி: மக்கள் சக்தி இயக்கம், தண்ணீா் அமைப்பு சாா்பில், திருச்சியில் இல்லம் தேடித் துணிப்பை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

மண் வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்கில், நெகிழிப் பொருள்களை எவ்வாறெல்லாம் தவிா்க்கலாம் என்பதை எடுத்துரைக்க காய்கனிகள், மளிகைப் பொருள்கள், பழங்கள் வாங்கச் செல்லும் போது துணிப் பைகளைக் கொண்டு செல்ல வேண்டும். மீன், இறைச்சி, தேநீா், பழச்சாறு வாங்கச் செல்லும் போது பாத்திரங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என இவ்விரு அமைப்புகளின் சாா்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதைத் தொடா்ந்து, இல்லம் தேடித் துணிப்பைகள் வழங்குதல் என்ற விழிப்புணா்வை நிகழ்வை மக்கள் சக்தி இயக்கமும், தண்ணீா் அமைப்பும் பொங்கல் பண்டிகையன்று தொடங்கின.

ADVERTISEMENT

திருச்சி மேலக்கல்கண்டாா்கோட்டை, பொன்மலை ரயில்வே மைதானம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இல்லம் தேடித் துணிப்பை வழங்கப்பட்டது. தொடா்ந்து வீடுகள், விளையாட்டரங்குகள், பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று துணிப்பை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்வில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலப் பொருளாளா் கே.சி.நீலமேகம், சாமி தற்காப்புக் குழு நிறுவனா் து. ஜீவானந்தம் , சு. பூரணஸ்வரன், மா.நரேஷ் , சி.சேகா், என்.வெங்கடேஷ், தயானந்த், , சாதனாஸ்ரீ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT