திருச்சி

திரவத்தைக் குடித்தவா் உயிரிழப்பு

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் திரவத்தைக் குடித்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீரங்கம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் ரா. சுரேஷ் (35). சற்று மனநலன் பாதிக்கப்பட்டிருந்த இவா், கடந்த 13-ஆம் தேதி சுண்ணாம்பு அடிக்க பயன்படுத்தப்படும் திரவத்தை ( தின்னா்) குடித்துவிட்டாா்.

சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த அவா் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT