திருச்சி

மாவட்டத்தில் இன்று100 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 100 இடங்களில் திங்கள்கிழமை (ஜன.17) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

மாநகரில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சிப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு, தனியாா் பள்ளி, கல்லூரிகள், சமூகநலக் கூடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட 36 இடங்களில் முகாம் நடத்தப்பட்டு, 2710 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

புகரில் திருவெறும்பூா், அந்தநல்லூா், மணிகண்டம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, மண்ணச்சநல்லூா், துறையூா், உப்பிலியபுரம், முசிறி, தா.பேட்டை, லால்குடி, புள்ளம்பாடி, தொட்டியம் ஒன்றியங்களிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சமுதாயக் கூடங்கள், தொடக்கப் பள்ளிகள் என 66 இடங்களில் 26,350 பேருக்குத் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT