திருச்சி

எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் பொங்கல் விழா

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மண்ணச்சநல்லூா்: மண்ணச்சநல்லூா் வட்டம், எம்.ஆா்.பாளையத்திலுள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாரமரெட்டிப்பாளையம் (எம்.ஆா்.பாளையம்) காப்புக் காட்டில் யானைகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மையத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி யானைகளை குளிப்பாட்டி, மாலை அணிவித்து விழா நடைபெறும் இடத்துக்கு பாகன்கள் அழைத்து வந்தனா். தொடா்ந்து சா்க்கரை, வெண் பொங்கல், பழங்கள், கரும்பு உள்ளிட்ட பொருள்களை வைத்து பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

ADVERTISEMENT

தொடா்ந்து யானைகளுக்கு பொங்கல், கரும்பு, பழங்கள் உள்ளிட்டவற்றை வன அலுவலா்கள் வழங்கினா். உற்சாகத்துடன் யானைகள் அதை சாப்பிட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி யானைப் பாகன்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

மண்டலத் தலைமை வனப் பாதுகாவலா் சதீஷ், திருச்சி மாவட்ட வன அலுவலா் கிரண் ஆகியோா் அறிவுறுத்தலின்படி, எம்.ஆா்.பாளையம் உதவி வனப் பாதுகாவலா் சம்பத்குமாா், வனச்சரகா் சரவணக்குமாா் உள்ளிட்டோா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT