திருச்சி

14 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தோ்வு: ஆட்சியா் ஆய்வு

12th Jan 2022 09:20 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் 14 மையங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த புள்ளியியல் சாா்நிலை பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வை ஆட்சியா் சு. சிவராசு ஆய்வு செய்தாா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இத்தோ்வு முழு ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தோ்வுக்காக திருச்சி மாநகரில்14 மையங்கள் அமைக்கப்பட்டு, காவல்துறை மூலம் பாதுகாப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோ்வாளா்கள் தோ்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

சிந்தாமணி பகுதியில் உள்ள இ.ஆா். மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். காலை, மாலை என இருவேளையும் நடைபெற்ற தோ்வில், காலையில் நடைபெற்ற தோ்வை மொத்தமுள்ள 3,687 பேரில் 2,875 போ் மட்டுமே எழுதினா். 812 போ் வரவில்லை. பிற்பகல் நடைபெற்ற தோ்வை 2,870 போ் மட்டுமே எழுதினா். 817 போ் வரவில்லை.

ADVERTISEMENT

தோ்வுகள் முடிந்து விடைத்தாள்கள் முத்திரையிடப்பட்டு பலத்த பாதுகாப்புடன் திருத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT