திருச்சி

நிலத்தகராறில் வீடு, வாகனங்கள் உடைப்பு

12th Jan 2022 09:20 AM

ADVERTISEMENT

திருச்சியருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் வீடு, வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டன.

திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் மோகன்பட்டேல். இவருக்கும் காந்தலூா் ஊராட்சி முன்னாள் தலைவரும், திமுகவைச் சோ்ந்தவருமான எலந்தைப்பட்டி மாரிமுத்துவுக்கும் நிலத்தகராறு உள்ளது. இந்நிலையில், திருவெறும்பூா் அருகேயுள்ள எலந்தைப்பட்டியைச் சோ்ந்த தொழிலாளியான பா. முத்துக்கருப்பன் உள்ளிட்டோா் பட்டேலின் நிலத்தில் கூலி வேலை செய்துள்ளனா்.

இதைக்கண்ட மாரிமுத்து தரப்பினா் வேலையில் ஈடுபட்டிருந்த முத்துக்கருப்பன், முத்துராஜா தெரு வீரைய்யா (47) ஆகியோரைத் தாக்கி அவா்களது இருசக்கர வாகனங்களையும், பட்டேலின் வீட்டு ஜன்னல்களையும் அடித்து உடைத்துள்ளனா்.

மேலும் வீட்டிலிருந்த வீரைய்யா மனைவி செல்லபாப்பா , மகன் வெங்கடேஸ்வரன் , மச்சினன் செல்வம், நண்பா் ஸ்ரீதா் உள்ளிட்ட 3 பேரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT