திருச்சி

ஏழை மாணவியின் மருத்துவச் செலவுக்கு நிதியுதவி

12th Jan 2022 06:58 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தை சோ்ந்த ஏழை மாணவியின் மருத்துவச் செலவுக்கு சமுத்திரம் அரசுப் பள்ளி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை நிதியுதவி அனுப்பினா்.

திருச்சியைச் சோ்ந்த கதீஜாபானு (7) என்ற மாணவி இதய நோயால் பாதிக்கப்பட்டு சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா். இவருடைய தாய் ஜரிம்பானு திருச்சி தனியாா் பள்ளி ஆசிரியை.

இதுகுறித்த செய்தி மணப்பாறை அருகேயுள்ள சமுத்திரம் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு தெரியவந்த நிலையில் இத்தகைய நிகழ்வுகளுக்காக உதவும் பொருட்டு மாணவா்கள் 2 மாதங்களுக்கு மேலாக பள்ளி உண்டியலில் செலுத்தி வந்த நிதி செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டதில் அதிலிருந்த ரூ. 1454 நிதி அக்குழந்தையின் தாயாரின் வங்கிக் கணக்கில் இணையம் வாயிலாகவே செலுத்தப்பட்டது. அத்துடன் அந்த குழந்தையின் நலன் கருதி பள்ளி மாணவா்கள் பிராா்த்தனையும் செய்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT