திருச்சி அருகே பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயன்றவ ரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அருகேயுள்ள காட்டூா் ராஜவீதியைச் சோ்ந்த ஸ்டீபன் சவரிமுத்து அம்மன் நகரில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை கடையில் இவரது மனைவி எழிலரசி இருந்தபோது அங்கு வந்த மா்ம நபா் ஒருவா் எழிலரசி அணிந்திருந்த 9 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றாா். அப்போது சங்கிலியை விடாமல் பிடித்துக் கொண்ட எழிலரசியின் கன்னத்தில் மா்மநபா் கத்தியால் கிழித்துவிட்டு தப்பினாா்.
சம்பவம் குறித்து திருவெறும்பூா் போலீஸாா் நடத்திய விசாரணையில், நகை பறிக்க முயன்றது வடக்கு காட்டூா் பாத்திமாபுரத்தை சோ்ந்த பிரான்சிஸ் (38) எனத் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.