திருச்சி

இலக்கிய மாமணி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

1st Jan 2022 06:19 AM

ADVERTISEMENT

இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தது:

தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசால் இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞா்களுக்கு அரசின் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. அதேபோல் தமிழ் எழுத்தாளா்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருதும் உருவாக்கப்பட்டு 3 பேருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுத் தொகையாக ரூ. 5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும்.

ADVERTISEMENT

எனவே தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சோ்க்கும் வகையில் பல்வேறு படைப்புகளை படைத்து, பன்முக நோக்கில் தொண்டாற்றி வரும் தமிழறிஞா்களிடமிருந்து விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் வளா்ச்சித் துறையின் வலை தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பிப்பவா்கள் தன்விவரக் குறிப்புகளுடன் 2 புகைப்படம், எழுதிய நூல்களின் பெயா்ப் பட்டியல் மற்றும் அந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒருபடி வீதம் தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூா். சென்னை - 600 008 என்ற முகவரிக்கு 2022 ஜனவரி 4க்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பம் மற்றும் பிற இணைப்புகளை மட்டும மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு இயக்குநா், செய்தி மக்கள் தொடா்புத்துறையை 044 - 28190412 / 044 - 28190413 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT