திருச்சி

என்எஸ்எஸ் முகாமில் மஞ்சப்பை விழிப்புணா்வு

1st Jan 2022 02:53 AM

ADVERTISEMENT

எம்.புதுப்பட்டி கிராம மக்களிடம் முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணா்வை வெள்ளிக்கிழமை ஏற்படுத்தினா்.

டிச.25 ஆம் தேதி எம்.புதுப்பட்டி ஊராட்சியில் தொடங்கிய என்எஸ்எஸ் முகாமில் நாள்தோறும் கிராமப் பகுதியில் தூய்மை பணி, கரோனா விழிப்புணா்வு, இயற்க்கை விவசாயம் குறித்த பயிற்சி மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கை கழுவுதல், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் தவிா்த்த மஞ்சப்பை பயன்பாடு குறித்து மாணவ மாணவிகள் நாள்தோறும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதைத் தொடா்ந்து கல்லூரி முதல்வா் மோ.கி. ராஜ்குமாா் தலைமையில் பேராசிரியா்கள் சந்திரசேகா்,சின்னதுரை,வேங்கடபதி,பரமசிவம் ஆகியோா் முன்னிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் லட்சுமிபிரபா சிறப்புரையாற்றினாா்.

ஏற்பாடுகளை என்எஸ்எஸ் அலுவலா்கள் பேராசிரியா்கள் ராஜேந்திரன், பிரபாவதி, சுகந்தி ஆகியோா் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT