துறையூா் அருகே கிணற்றில் மூழ்கிய சிறுவனை தீயணைப்புத் துறையினா் தேடுகின்றனா்.
செங்காட்டுப்பட்டி ராஜாபுரம் காலனியைச் சோ்ந்த சேகா்- மஞ்சுளா தம்பதிக்கு மகள் பிரமிகா (16), மகன் திலக் (11) ஆகியோா் உள்ளனா்.
நீச்சல் தெரியாத திலக் நண்பா்களுடன் 100 அடி ஆழக் கிணற்றில் வெள்ளிக்கிழமை குளித்தபோது ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீரில் மூழ்கினாா். இதையடுத்து மற்ற சிறுவா்கள் அளித்த தகவலின்பேரில் ஊா்க்காரா்களும், துறையூா் தீயணைப்பு நிலைய பணியாளா்களும் கிணற்றில் தேடியபோது கிணற்றில் நீா் அதிகமாக இருந்ததால் சிறுவனைக் கண்டுபிடிக்க இயலவில்லை. எனவே, கிணற்று நீரை வெளியேற்றி சிறுவனைத் தேட முடிவு செய்துள்ளனா்.
விவசாயி: உப்பிலியபுரம் காளிவட்டம் தெற்கு பகுதியைச் சோ்ந்தவா் பெ. சந்திரசேகா்(35), விவசாயி. வெள்ளிக்கிழமை வெங்கடாசலபுரத்தில் உள்ள தனது வயல் கிணற்றில் நீா் மட்டத்துக்கேற்ப மின்மோட்டாா் பொருத்தும் பணியில் ஈடுபட்ட அவா் கிணற்றுக்குள் தவறி விழுந்து மூழ்கினாா்.
உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினா் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.